க்ன கேந்திரத்தில், சனியின் கும்ப ராசியில் சந்திரன் இருந்தால் உடல்நலத்தில் சிறிய குறையிருக்கும். மனதில் எப்போதும் சிந்தனைகள் தோன்றும். பயமிருக்கும். ஜாதகருக்கு பகைவர்கள் இருப்பார்கள். அவர்களால் பிரச்சினைகள் உண்டாகும். எனினும், தன் மன பலத்தைக்கொண்டு ஜாதகர் எதிரிகளை வெல்வார். பணம் சம்பாதிப்பார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு மனதில் தைரியமிருக்கும். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். நன்கு உழைத்து பணம் சம்பாதிப்பார். பகைவர்களால் கஷ்டங்கள் இருக்கும். எனினும் அவர்களை எதிர்த்து போராடி ஜாதகர் தன் செயலில் வெற்றிபெறுவார்.

3-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு மன தைரியமிருக்கும். சிறிய அளவில் கஷ்டங்கள் உண்டா கும். உடன்பிறந்தோரால் கவலை ஏற்படும்.

kumbarasi

Advertisment

4-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சந்திரன் உச்சமடைகி றது. அதனால் அன்னையால் சந்தோஷம் உண்டாகும். வீடு, மனை வாங்கலாம். பகைவர்கள் பயப்படுவார்கள். ஜாதகர் சண்டை, சச்சரவில் ஈடுபடுவார். பணம் சம்பாதிப்பார்.

5-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு மனபலம் இருக்கும். அறிவு நன்றாக வேலைசெய்யும்.

ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். படிப்பு விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் உண்டாகும். மனதில் எப்போதும் சிந்தனை இருக்கும். சிலருக்கு மனநோய் ஏற்படும்.

Advertisment

6-ஆம் பாவத்தில் சுயராசியான கடக ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். சண்டை, சச்சரவுகளில் தைரியமாக ஈடுபட்டு வெற்றிபெறுவார். மனதில் எப்போதும் சிந்தனையும் குழப்பமும் இருக்கும். அதனால் கவலை உண்டாகும்.

7-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பெண்களால் நோய் உண்டாகும்.

வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். அதில் இறுதியாக வெற்றிகிடைக்கும். ஜாதகர் தன் பகைவர்களை துணிச்சலுடன் சந்திப்பார்.

8-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சந்திரன் இருந்தால் பல பிரச்சினைகள் உண்டாகும். பூர்வீக சொத்து கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். எப்போதும் மனதில் சிந்தனை இருக்கும். மாமனார் வீட்டில் ஜாதகருக்கு ஏதாவது பிரச்சினை எழும்.

9-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் சந்திரன் இருந்தால் தர்மச் செயல்களில் ஈடுபடு வதில் சிறிய தடைகள் உண்டாகும். பெயர், புகழில் குறையிருக்கும். பல போட்டிகளைச் சந்தித்து, பல பகைவர்களுடன் போராடி ஜாதகர் பணம் சம்பாதிப்பார் 10-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சந்திரன் நீசமடைகிறது. அதனால், ஜாதகருக்கு தந்தை யால் கிடைக்கும் சந்தோஷம் குறைவாகவே இருக்கும்.

அரசாங்க விஷயங்களில் பிரச்சினை ஏற்படும். வியாபாரத்தில் பல தடங்கல்கள் உண்டாகும். பகைவர்களை அடிக்கடி சந்திக்க வேண்டியதிருக்கும்.

அதனால், மனதில் கவலை உண்டாகும்.

11-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சந்திரன் இருந்தால் மனதில் தைரியமிருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து பணத்தைச் சம்பாதிப்பார். பகைவர்களை வெல்வார்.

பணத்தை சம்பாதிப் பதற்காக பல இடங்களுக் கும் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் ஜாதகருக்குத் திருப்தியே உண்டாகாது.

12-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சந்திரன் இருந்தால் செலவு கள் அதிகமாக இருக்கும்.

இல்வாழ்க்கையை நடத்து வதற்கே சிரமப்பட வேண்டி யதிருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் பண வரவிருக்கும். பகைவர் களால் மனக்கஷ்டம் ஏற்படும்.

செல்: 98401 11534